20 வயதிற்கு மேல் மூன்றாவது ஊசியாம்!
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று ஒரு மாதம் நிறைவடைந்திருந்தால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் பீ.1.617.2.104 என்ற மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பீ.1.617.2.28 என்ற டெல்டா உப வைரஸ் திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்

No comments