பிரித்தானியாவில் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £9.50 ஆக உயரும்


பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் ஒரு மணித்தியாலயத்திற்கு 9.50 பவுண்கள் என உயரவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை வரவு செலவு பாதீட்டில் தற்பொது நடைமுறையில் இருக்கும் ஒரு மணி நேரத்திற்கு 8.91 பவுண்கள் என்ற ஊதியம் 9.50 பவுண்கள் என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 23 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது வழகப்படும் ஊதியத்தில் 6.6% அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதாவது 0.59 பென்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது.  பிரித்தானியாவில் கொரோனாவுக்கான பின்னரான வாழ்க்கைச் செலவு 3.1% உயர்வடைந்துள்ளது. எனவே ஊதிய உயர்வு வாழ்க்கைச் செலவு உயர்வில் இரண்டு மடங்குக்குக்கு அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஊதிய அதிகரிப்பு அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

No comments