சூடானில் இராணுவ சதிப்புரட்சி!! வீட்டுக்காவலில் பிரதமர்!!

சூடானில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி காரணமாக அந்நாட்டின்பிரதமர் அப்துல்லா கம்டோக் கைது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் குழுத் தலைவர் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் இடைக்கால அரசாங்கம் மற்றும் இறையாண்மை கவுன்சில் கலைக்கப்படுவதாக அறிவித்தார் அத்துடன் நாடு தழுவிய அவசர நிலையையும் அவர் அறிவித்தார்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் கார்டூமில் வீதிகளில் இறங்கினர், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட கால ஆட்சியாளர் ஒமர் அல்-பஷீர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறியப்பட்டு, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இராணுவ மற்றும் பொதுமக்கள் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கூட்டு இராணுவப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கான இங்கிலாந்தின் சிறப்பு தூதர் ராபர்ட் ஃபேர்வெதர், ட்விட்டரில் தெரிவிக்கையில்:-

பொதுமக்கள் தலைவர்களை இராணுவப் புரட்சி மூலம் கைது செய்யப்பட்டம சூடான் மக்களுக்கு இராணுவம் செய்த துரோகம் என்று கூறினார்.

அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரபு லீக் ஆகியவையும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளன.


இணையம் செயலிழந்துவிட்டதாகவும், நகரம் முழுவதும் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகர் கார்டூம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, மேலும் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என அங்கிருந்து வரும் செய்கள் தெரிவிக்கின்றன.

No comments