நடேசன் விசாரணைக்கு ஆஜர்!

கோத்தா மற்றும் பஸிலின் பினாமியென அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பென்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், அவர் இன்று(08) காலை முன்னிலையாகியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments