இந்திய மீனவர்களை வேட்டையாட வந்த படகு?


இலங்கை படைகள் தரைவழியாக எடுத்துச்செல்ல முற்பட்ட தாக்குதல்  படகு தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

மூடிக்கட்டப்பட்ட நிலையில் தாக்குதல் படகொன்றை ஏ-9 வீதி ஊடாக எடுத்துச்செல்ல படைத்தரப்பு முற்பட்டிருந்த நிலையில் வீதி விபத்தில் படகு வீதியில் வீசப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்திருந்த போதும் தாக்குதல் படகை பாதுகாப்பதிலும் மூடி மறைப்பதிலும் படை தரப்பு முனைப்பு காண்பித்தது.

இந்திய மீனவர்களை சிறைப்பிடிக்கலாமென்ற அரச அமைச்சரின் அறிவிப்பின் மத்தியில் இத்தகைய தாக்குதல் படகுகள் நகர்த்தப்படுகின்றமை சதி வேலைகளின் தொடர்ச்சியாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக –தமிழீழ மீனவர்களிடையே மோதல்களை தோற்றுவிக்கும் சதியாக இது பார்க்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய படகை இரகசியமாக நகர்த்த முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பின்னராக சதிகள் இருக்கலாமென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments