தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!

 

கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ  ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில்

ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் முஸ்லிம் கட்சிகளான, தமிழ் தேசிய கூட்டமைப்பு (தமிழரசு கட்சி, ரெலோ, புளொட்), தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் (ஜமமு, தொதேமு, மமமு), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, ததேமமு ஆகிய கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தன.

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் இந்நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன் போதே முன்னணியின் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


No comments