கொரோனா தடுப்பு மாத்திரை!! அனுமதிக்கான விண்ணப்பம்!!


கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும் இறப்பையும் குறைக்கும் என்று அறிவித்தது என மருந்து நிறுவனமான மெர்க் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

மோல்னுபிரவீர் அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான முதல் வாய்வழியான மாத்திரை தடுப்பு சிகிச்சையாக இருக்கும்.

இது காப்ஸ்யூல் வடிவத்தில் வருகிறது. கடுமையான கோவிட் -19 நோய் அல்லது மருத்துவமனையில் சேரும் அபாயத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க காப்ஸ்யூல்களுக்கு அங்கீகாரம் கேட்பதாக மெர்க் கூறுகிறது.

700 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிற்சை அளிக்கப்பட்டு மருந்து நன்றாக வேலை செய்ததால் இந்த விண்ணப்பதை அந்த நிறுவனம் முன்வைத்துள்ளது.

இடைக்கால பகுப்பாய்வில், மோல்னுபிரவீர் மருத்துவமனையில் சேர்க்கும் அல்லது இறக்கும் அபாயத்தை ஏறக்குறைய 50% குறைத்துள்ளது எனக் கூறுகின்றது.

மோல்னுபிரவீர் பெற்ற நோயாளிகளில் இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. ஆய்வில் இந்த மாத்திரை பயன்படுத்தியவர்கள் எவரும் இதுவரை மற்றைய தடுப்பூசிகளைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

தற்போது அங்கீகரிக்கப்பட்ட மற்ற மருந்துகள் நரம்பு வழியாக வழங்கப்பட வேண்டும் அல்லது ஊசி போடப்பட வேண்டும்.

ஒரு மாத்திரை நோயாளிகளுக்கு அவர்களின் நோய்த்தொற்றில் சிகிச்சை அளிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.

இது மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயால் நோயாளர்கள் நிரம்பி வழிவதைத் தடுக்கலாம். குறிப்பாக தடுப்பூசி விகிதம் இன்னும் குறைவாக இருக்கும் இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம். இது வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான கொண்ட நாடுகளிலும் பயன்படுத்தலாம் என யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

No comments