ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பொறுப்பேற்பார்!

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை ஜீவன் தியாகராஜா வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது.

இதற்கேதுவாக ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, புதன்கிழமை முதல் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். 

No comments