நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு


அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. 

அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என  வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இக்கோழிக் குஞ்சைப்  பார்வையிட அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன்  வருகை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments