ஒரே இனம்,ஒரே நாடு:ஆணியே பிடுங்கவேண்டாம்!ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள்  என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லையென தெரிவித்துள்ளார் மனோகணேசன்.  

ஆனால், "ஒரு நாடு" என்று சொல்லி விட்டு, அதில் கூட தமிழருக்கு இடம் கொடுக்க இந்த அரசுக்கு அக்கறை இல்லையே, அவ்வளவுக்கு வெறுப்பு மற்றும் அலட்சியமா என்றும் கேட்டு இருந்தேன். 

அதேபோல் முஸ்லிம் உறுப்பினர்களின் நியமனம் இஸ்லாமிய சகோதரர் மீது விசேட பாசம் என்பதால் அல்ல என்றும், “அவர்களை” பக்கத்தில் "வைச்சு செய்யத்தான் முஸ்தீபு" என்றும் கூறியிருந்தேன். 

ஞானசாரர் தலைமையில் குழு என்றால், யாரை நியமித்து என்ன பயன்?, "..பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என புரிகிறது.." எனவும் கூறியிருந்தேன். 

இதை ஏன் இப்போ மீண்டும் கூறுகிறேன் என்றால், இக்குழுவில் தமிழரை நியமிக்க ஜனாதிபதியை இணங்க செய்து விட்டோம், சாதித்து விட்டோம், என அரசுக்குள் இருக்கும் “செந்தமிழர்” சிலர் இப்போது சொல்லுவார்கள். அதான் எனவும் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்துக்கு எதிரானது என்றும், எனவே திருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியதாகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை விரிவுபடுத்துவதாக உறுதியளித்ததாகவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.


நேற்று (28) மாலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.No comments