தப்பித்தால் போதும்?இலங்கை அரசிற்கு அஞ்சி தமிழர்கள் ஓடுவது தாண்டி தற்போது சிங்கவர்களும் தப்பிக்க முறபட்டுள்ளனர்

இலங்கை மல்யுத்த அணியின் முகாமையாளராக செயற்பட்ட டொனால்ட் இந்திரவங்ச காணாமல் போயுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி தகவல் வெளிவந்துள்ளது.

அவர் அகதி அந்தஸ்த்து கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற உலகக் கிண்ண மல்யுத்த போட்டியில் கலந்துக்கொண்ட இலங்கை அணியின் முகாமையாளராக செயற்பட்ட டொனால்ட் இந்திரவங்ச, நோர்வேயில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இலங்கை மல்யுத்த அணி இலங்கை திரும்புவதற்கு முதல் நாள் அவர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துக்கொண்ட ஏனைய அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி அனுசரணையில் இந்தப் போட்டியில் கலந்துககொண்ட இலங்கை மல்யுத்த அணியில், வீர, வீரங்கனைகள் 5 பேர் உட்பட 7 பேர் அங்கம் வகித்தனர்.


உலக கிண்ண மல்யுத்த போட்டி கடந்த மாதம் 2 ஆம் திகித ஆரம்பமாகிய நிலையில், இந்த அணி கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி இலங்கையில் இருந்து நோர்வே புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments