போட்டுத்தாக்கும் போட்டோக்கள்!

கொரோனா பெருந்தொற்றில் மக்கள் பட்டினியுடன் வாட அரசியல்வாதிகளோ தமது அலப்பறைகள் சகிதம் நகைச்சுவை காட்சிகளை காண்பித்துவருகின்றனர்.

ஒருபுறம் கிளிநொச்சியில் எம்.ஏ.சுமந்திரன் உதவியாளர் சயந்தன் சகிதம் வயல் விதைப்பில் ஈடுபட இன்னொருபுறம் கோத்தபாயவோ அனுராதபுரத்தில் படையினரிடையெ கிரிக்கெட் விளையாடி படம் காண்பித்தனர்.



தென்னிலங்கை மக்கள் ஒருவேளை  சோத்திற்கு வீதியில் திண்டாட கோத்தபாய கிரிக்கெட்ட விளையாடுவதை சிங்கள ஊடகங்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளன.

மறுபுறம் விவசாயிகளிற்கு ஒரு துரும்பையும் கிள்ளி போடாத கொழும்பு வாழ் சுமந்திரன் வடக்கு விவசாயத்திற்கு என்ன செய்யவேண்டுமென்பதை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

"வடக்கு கிழக்கில் 40 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் தேவைகளை அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய தேவை இன்னும் நிலுவையாக இருக்கின்றது  

குறிப்பாக  உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு அடிப்படை விடயங்களில் மிக ஆழமாக அவதானம் செலுத்தப்பட வேண்டி இருக்கின்றது

அதே போன்று சரியான உள்ளூடுகள் , உள்ளீடுகளுக்கான மானியம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு   உரிய நேரங்களில் பெற்று கொடுக்க வேண்டி  இருக்கின்றது

அதே போல உற்பத்திகளுக்கான நியாயமான சந்தைவாய்ப்புகள் பெற்று கொடுக்கப்பட வேண்டும்  

இதுமாத்திரமின்றி பிரதேசங்கள் தோறும் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தரகர் தலையீடுகள் , 10 வீதமான கழிவுகள் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு  நியாயம் பெற்று கொடுக்கப்பட்ட  வேண்டும்

அதே போல  மத்திய மற்றும் மாகாண மட்ட விவசாய அலுவலகங்களில் நிலவும்  வெற்றிடங்கள்  தகுதியானவர்கள் மூலம் நிரப்பபட வேண்டும்

குறிப்பாக பரந்தன் விவசாய கல்லூரி போன்ற விவசாய நிறுவனங்களுக்கு போதிய  நிதி ஒதுக்கீடுகள்  செய்யப்பட்டு முழுமையாக இயக்கப்பட வேண்டும்

விவசாயத்துறையில் ஈடுபாடு காட்டும் மக்களுக்கு  (சிறுபோகம் , பெரும்போகம் ) தேவையான போதிய நீர் கிடைப்பதில் நீடிக்கும் நெருக்கடிகள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக வறட்சி மிக  உற்பத்தியாளர்களுக்கு மிக பெரிய துயரமாக இருக்கிறது . அதே போல விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வரும் அவலங்களும் நடந்து வருகின்றன.  

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வாதார செயல்பாடுகளுக்கு நீர்பாசனத்தினை நம்பி இருக்கிறார்கள்.

வடக்கு மாகாணத்தில்  45 நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும் 9 பாரியளவிலான நீர்ப்பாசன திட்டங்களும் இருக்கின்றன.

அதே போல  2,066 குளங்களும் இருக்கின்றன .

ஆனால் அண்மைய தகவல்களின் படி 70,000-90, 000 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன வசதிகளை பெற்று வருகின்றன.

மேற்குறித்த நெருக்கடிகளை தீர்ப்பதற்காக  சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்துதல், உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,  விவசாய சமூகத்தை வலுவடைய செய்தல் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்த பட வேண்டி இருக்கிறது .

அதே போல நெற்களஞ்சியசாலைகள் உட்பட உற்பத்திகளை பாதுகாக்க தேவையான களஞ்சியசாலைகள் உருவாக்க பட வேண்டும்

இது தவிர, மேட்டு நிலப்பயிர்களாக பயிரிடப்படும் பருவகால பயிர்கள், வீடு தோட்ட பயிர்கள், நீண்டகால பயிர்கள் ஆகிய குறித்தும் நீண்டகால திட்டங்கள் உருவாக்க பட வேண்டும்

வாழை, முந்திரி போன்ற வர்த்தக நோக்கில் பயிரிடப்படும் பழ  செய்கை, மரக்கறி உற்பத்தி  ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது . இதனூடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தில்  விவசாய துறையின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

வடக்கு கிழக்கில் கணிசமான விளைநிலங்கள் இன்னும் இலங்கை இராணுவத்தினர்  வசமே இருக்கிறது .

குறிப்பாக இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும்  விவசாய பண்ணைகள் மீள பெறப்பட்டு பொதுமக்களிடம் வழங்க பட வேண்டும்.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விவசாய பண்ணைகளை ஆக்கிரமித்து ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் உழைத்து  வருகின்றார்கள்  

அதே போல கிளிநொச்சி விவசாய பண்ணைகளின் மூலம் ஏறத்தாழ 13 மில்லியன் வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்.

 அதே நேரம் உள்ளூர் விவசாயிகளுக்கு போட்டியாக இலங்கை இராணுவத்தினரும்  விவசாயம் செய்கிறார்கள் .இது சந்தையில் நிரம்பல் அதிகரித்து உற்பத்திகள் விலை குறைந்து விவசாயிகள நட்டமடைகின்ற சூழலும் இருக்கிறது.

மறுபுறம் பல்வேறு நீர்நிலைகளை வன வள திணைக்களம் அபகரித்து இருக்கிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே கமநல சேவை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 400 விவசாயக் குளங்கள் உள்ள நிலையில் பல குளங்களை  வனவளத் திணைக்களத்தினர் அபகரித்து இருக்கின்றார்கள்

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உட்பட்டதாக சுமார் 78 வரையிலான விவசாயக் குளங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இது தவிர, வன்னி தேர்தல் மாவட்டத்தில்  333 விவசாய குளங்கள் கடத்த பல வருடங்களாக வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்க பட்டு இருக்கின்றன.  அதாவது வன்னியில் உள்ள 23%-24 % குளங்கள் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

குறிப்பாக வவுனியாவில் உள்ள 780 நீர்ப்பாசன குளங்களில் 157 வனவள திணைக்களம் ஆக்கிரமித்து உள்ளது.

மன்னர் மாவட்டத்தில் உள்ள 368 குளங்களில் 98 குளங்கள் வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது

அதே போல முல்லைத்தீவு , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளின் எல்லைகளில் உள்ள விவசாய நிலப்பரப்புகளை  மத்திய அரசின்  பல்வேறு திணைக்களங்கள் ஊடக அபகரிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன"


No comments