செயலிகள் மீண்டும் வழமைக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தும் பேஸ்புக் , வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு செயலிழந்தன.

சர்வதேச ரீதியில் இந்தத் செயலிகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியெனச் செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்துக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) கூறியுள்ளது. 

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு இவ்வாறான பாரிய செயலிழப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தற்போது குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு வந்துவிட்டன.

 

No comments