ஒரு மணி நேரத்தில் மூவரிடம் பணம் கொள்ளை?வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்தினுள் இன்று மாலைவேளை மூவரிடம் பணத்தை சுருட்டியவாறு தப்பித்து சென்ற கும்பலை காவல்துறை தேடிவருகின்றது.

வெள்ளை நிற கார் ஒன்றினில் பயணித்த மூவர் கொண்ட இக்கும்பல் வல்லைப்பகுதியில் வீதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பான அட்டையினை கோரியுள்ளனர்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடமிருந்த பணத்தை பறித்து தப்பித்துள்ளது.

அதே போன்று இழுவை இயந்திரத்தில் கல் ஏற்றிவந்திருந்த ஒருவரை வல்வெட்டித்துறையில் வழிமறித்து பெமிட் கோரிய கும்பல் அவரிடமிருந்தும் பணத்தை பறித்து சென்றுள்ளது.

ஒரே நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த துணிகர பணப்பறிப்பு தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. 

குறித்த காரிலிருந்த ஒருவர் அங்வீனமுற்றவர்களின் பயன்பாட்டிலுள்ள கைத்தடியை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.    


No comments