முல்லை, யாழில் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?  எனக்கோரி முல்லைதீவிலும் யாழ்ப்பாணத்திலும்

கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முன்னெடுத்துள்ளன.

சர்வதேச சிறுவர் தினத்தில் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் மற்றும் உறவினர்களால் இப்போராட்டம் முல்லைதீவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜநா அலுவலகம் முன்பதாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இறுதி யுத்த காலத்தில் தமது சிறு பிள்ளைகள் சகிதம் சரணடைந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பற்றி தகவல்கள் ஏதுமற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments