நிரூபமாவிடமுள்ள பணம் யாருடையது?

 

நிரூபமாவிடமுள்ள பணம் பஸிலின் பணமா அல்லது கோட்டபாயவினுடையதாவென்ற கேள்விகள் மத்தியில் பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு  உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை இந்த உத்தரவை  ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.


No comments