இனஅழிப்பின் பங்காளிகள் ஒன்று கூடினர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி General Manoj Mukund Naravane  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  இன்று இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் படைப்பிரதானி ஆகியோரின் அழைப்பினை  இந்திய இராணுவத் தளபதி General Manoj Mukund Naravane   இலங்கைக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி பங்கேற்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று ராணுவத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, இலங்கை – இந்திய ராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற மித்ராசக்தி போர்ப் பயிற்சி, இந்திய இலங்கை ராணுவ புரிந்துணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய ராணுவத் தளபதி, இன்று ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளதாக ராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை – இந்திய ராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற மித்ராசக்தி போர்ப் பயிற்சிகளையும் அவர் பார்வையிடவுள்ளதாக ராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


No comments