பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசையில் மக்கள்!


பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் நிலையங்களில் பற்றாக்குறை தொடர்வதால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துநிற்கின்றனர்.

2000க்கும் மேற்பட்ட நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது. லண்டன், தெற்கு இங்கிலாந்து ஆகியவற்றில் பல்வேறு பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவும் சூழலால், நிலையங்களுக்குப் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விநியோகம் செய்யும் கனரக வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது அதற்குக் காரணம்.அதனால் பிரிட்டிஷ் மக்கள் அவசர அவசரமாகப் பெட்ரோலை வாங்க முயல்கின்றனர்.

No comments