மீண்டும் புலி பூச்சாண்டி!
விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுள் 84 தமிழ் இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் கைதாகியுள்ளனர.

இதனிடையே கைத்துப்பாக்கி  ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவலின் அடிப்படையில் வீடொன்றில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் கைப்ற்றப்பட்டுள்ளன.

அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அங்கு வசித்த பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments