யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் நினைவு நாள்

யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் வரலாற்றுப் பதிவுகளை நினைவுபடுத்தியதோடு , இளையோர்களால் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பாடலும் ஒலிபரப்பப்பட்டது.

2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமையையும் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

No comments