பேரரசரின் ஆட்சியிலே:14 விழுக்காடு ஒரு வேளை உணவு!



இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் கொரோனா தொற்று பரவியதில் இருந்து சத்தான உணவை இழந்துள்ளனர் என உணவு உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பத்து மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு அந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்களில் 71% பேர் குறைந்த விலையுள்ள உணவை உண்டதாகவும், 69% பேர் வாரத்திற்கு ஐந்து வேளை உணவை உண்ணாதவர்களாகவும் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

14% பேர் ஒரு நாள் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட சாப்பிடவில்லை என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

No comments