கோதுமைமாவும் எகிறியது!

அத்தியாவசிய பொருட்களது விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து செல்லும் நிலையில் இலங்கை அரசு மக்களது கவனத்தை ஈர்க்க வெவ்வேறு விடயங்களினை முன்னிறுத்தி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மறைக்க அருவியில் பாலியல் நேரஞ்சல் விடயத்தை தூக்கிப்பிடித்துள்ள நிலையில் மறுபுறம் கோதுமை மாவின் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கோதுமை மாவிற்கான விலை அதிகரிப்பிற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாண் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில் கோதுமை மாவின் விலையேற்றம் மீண்டும் ஒரு பாண் உற்பத்தி பொருட்களது விலையேற்றத்திற்கு வழிகோலுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments