ஆரம்பமானது லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்!!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும்

ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது . கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணத்தில் பங்குகொண்டு சுகயீனம் காரணமாக கடந்த வருடம் சாவை தழுவிக்கொண்ட திருமதி விஜயவாணி அரவிந்தன் அவர்களுக்கு நினைவு வணக்கங்களும் , அக வணக்கத்தோடு மிதிவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது.  தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு கையளிக்கப்பட்டு மதியம் 3 மணியளவில் பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் மனு கையளிக்கப்பட இருக்கிறது.

No comments