கைதடி முதியோர் இல்லம்:மேலும் 72?

தென்மராட்சியில் கொரோனா தொற்று கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 25 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.103 பேருக்கான பரிசோதனை இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றினால் மூடப்பட்டுள்ள கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் சாவகச்சேரியில் 106 பேருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைதடி முதியோர் இல்லத்தில் 44 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இல்லம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments