யாழைத் தொடர்ந்து முல்லையிலும் தடை!

 

திலீபனிற்கான நினைவேந்தலிற்கு முல்லைதீவிலும் இலங்கை காவல்துறை தடை உத்தரவு பெற்றுள்ளது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது.   

இதனிடையே எத்தனை கெடுபிடிகள், எத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலுக்கமைவாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.No comments