தன்னால் சிறைக்கைதிகளிற்கு ஆபத்தாம்: சுமா!

 


சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை தான் பார்வையிட சென்றால் அவர்களிற்கு ஏதும் நடந்துவிடுமென தெரிவித்துள்ளாராம் எம்.ஏ.சுமந்திரன்.

அனுராதபுர சிறை விவகாரம் தொடர்பில் சீறும் அறிக்கையினை விடுத்த எம்.ஏ.சுமந்திரனிடம் ஆதரவாளர்கள் அனுராதபுரத்திற்கு சென்று உண்மையினை கண்டறிய கேட்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் சிறையில் கைதிகள் கோபத்தில் சுமந்திரனை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே இவ்வாறு காய்வெட்டுவதாக ஆதரவாளர்கள் குசுகுசுத்துள்ளனர்.

இதனிடையே அனுராதபுர சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அநுராதபுர சிறைச்சாலைக்கு கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் தனது நண்பர்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே இரு அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி முழங்காலிட பணித்தார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.  

அந்நிலையில் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு , அது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

எனினும் குறித்த அமைச்சரோ அது பற்றி துரும்பிற்கும் பொருட்படுத்தாது கொழும்பில் திரிவதாக சொல்லப்படுகின்றது.


No comments