மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடி!! அச்சத்தில் மக்கள்


மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவத்தினர் மக்களை சோதனை செய்து வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் குறித்த பகுதிகளில் இராணுவத்தின் சோதனை இடம்பெற்று வருகின்றது. 

குறிப்பாக குறித்த வீதிகள் ஊடாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுவதோடு, வாகனங்களும்  சோதனை செய்யப்படுகிறன.

திடீர் என குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதால் அவ் வீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

No comments