லொஹான்:நகை களவெடுத்தால் அந்த அமைச்சினையும் கைவிடுவார்?

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த லொஹான் ரத்வத்த தங்க ஆபரண கொள்ளைக்குச் சென்றிருந்தால், ஆபரணங்கள் கைத்தொழில் அமைச்சிலிருந்தும் பதவி விலகியிருப்பார் என தெரிவித்துள்ளார் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச.

அவரால் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பொறுப்பை ஏற்று பதவி விலகியுள்ளமையானது. நாட்டுக்கு முன்னுதாரணமான செயல் என தெரிவித்துள்ளதுடன் , தவறொன்றை இழைப்பதை விட அந்த தவறுக்கு மன்னிப்பு கோரி பதவி விலகியமையானது சிறந்த பண்பு என்றார்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் இதற்கு முன்னர், இவ்வாறான எவரும் தவறு செய்த எவரும் அவர்களாகவே முன்வந்து இவ்வாறு முன்மாதியாக செயற்படவில்லை என்றும் எனவே லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, முன்மாதிரியான செயற்பாடு இடம்பெறவில்லை.

இதன்போது, அவர் இராஜாங்க அமைச்சில் ஒன்றை மாத்திரமே துறந்துள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், லொஹான் ரத்வத்த தங்க ஆபரண கொள்ளைக்குச் சென்றிருந்தால், ஆபரணங்கள் கைத்தொழில் அமைச்சிலிருந்தும் பதவி விலகியிருப்பார் என்றார்.

No comments