கிளிநொச்சியில் விபத்து


கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பளை காவல் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து பயணித்த ஊழியர் சேவை பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரே திசையில் பயணித்த பேருந்தின் முன் சென்ற முச்சக்கரவண்டி சடுதியாக வீதியின் குறுக்காக திரும்பி கிராமத்துக்கு செல்ல முற்பட்ட வேளை பேருந்து மோதியுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி பாரிய விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments