150 இராணுவ ஓட்டுநர்களுக்கு ஒப்புதல்!! தொடங்குகிறது எரிபொருள் விநியோகம்!!


இங்கிலாந்தில் எரிபொருள் நிலைமை வழமைக்குத் திரும்பத் தொடங்குகிறது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

வாகன ஓட்டிகள் வழமை போன்று வானங்களுக்கு எரிபொருளை நிரப்புமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம் 150 இராணுவ கொல்கலன் ஓட்டுநர்கள் எரிபொருளை வழங்குவதற்கான கோரிக்கைக்கு பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிதாக எடுக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயிற்சிகள் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் புதிய ஓட்டுநர்கள் எரிபொருள் நிரப்புவதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

முதல் விநிநோகம் இந்த வார இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments