கடிதங்கள பற்றி அக்கறையில்லையெனும் டக்ளஸ்!கடந்த சில வாரங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பாக இருக்கின்றதான நிலையில் இவ்வாறான கூத்துக்களை நான் கண்டுகொள்வதில்லையென்றுள்ளார் அரச அமைச்சர் டக்ளஸ். இவ்வாறானவர்களுக்கு கொள்கையும் இல்லை வேலைத் திட்டங்களும் இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை மாத்திரமே நோக்கமாக கொண்டவர்கள். அந்த நோக்கத்திற்கான சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கூத்துக்களில் ஈடுபடுகின்றார்கள். 

இவர்கள் அனுப்பிய கடிங்கள் எவையும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை, ஆணையாளர் நாயகத்தின் உரையின் போது, தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களை, தாங்கள் சார்ந்த சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றவர்களாக ஏனையவர்களால் மதிக்கப்பட வேண்டும். ஆனால் எமது அரசியல் தரப்புக்களின் சிறுபிள்ளைத்தனங்கள் ஏனையவர்கள் கண்டுகொள்ளாத நிலையினைத்தான் உருவாக்கியிருக்கின்றதெனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.;


No comments