எது நல்லது:கூட்டமைப்பின் முன்னாள் இன்னாள் குழப்பம்!கூட்டமைப்பினர் இதுவரை ரணில்,மைத்திரியின் கால்களை நக்கிக்கொண்டிருந்தார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான வியாழேந்திரன்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கேள்வியெழுப்பியுள்ள நிலையில் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் வியாழேந்திரன்.

அனுராதபுர சிறைச்சாலையில் போதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாளிடவைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியிருந்தார். அவ்வாறான ஒருவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வியாழேந்திரன் வடகிழக்கில் பெரும்பான்மை பலமாக இருந்த கூட்டமைப்பு நல்லாட்சி எனப்படும் காலத்தில் எந்தவொரு நிபந்தனையுமின்றி ரணில்-மைத்திரிக்கு வழங்கிய முட்டுக்கொடுப்பும் இத்தகைய கால்களினை நக்குவதாக அமையுமாவென கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments