அமைச்சரை பதவி நீக்கவேண்டும்:சஜித்
அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு  இழிவான  மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கை கண்டிப்பதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இவ்வாறான செயலில் ஈடுபட்ட அந்த நபரை அமைச்சு பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழ் - சிங்கள -  ஆங்கில மொழிகளில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“அநுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசாங்த்துக்கு கடப்பாடு உள்ளது.

இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments