கஜேந்திரகுமாரும் கேட்கிறார்!அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்வேன் என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியுள்ளார்.இந்நிலையில் அவரை கைதிகளது நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைச்சராக தொடர்ந்து வைத்திராது வீட்டிற்கு அனுப்பவேண்டுமென யாழ்.மாவட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

காணொலி வழி நடத்திய ஊடக சந்திப்பில் இன்று இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவத்துக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும்; கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.


No comments