தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் சுட்டுக்கொலை!!


ஆப்கானிஸ்தான் மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோவில் தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவர் உறவினர்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அடித்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எட்டு மாதக் கர்ப்பிணயாக இருந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினரது வீட்டுக்குள் சென்ற மூன்று ஆயுதம் ஏந்திய தாக்குதலாளிகளே அவரைச் சுட்டுக்கொன்றனர். தாக்குதலாளிகள் அரபு மொழி பேசியதாக சாட்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர். இச்செய்தியை தாங்கள் கேட்விப்பட்டதாகவும் அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments