சீனா உரத்திற்கு தடை விதித்தது இலங்கை

சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி  செய்வதற்கான தீர்மானம் தடை செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட  மாதிரிகளில் இலங்கையின் மண்வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சேதன பசளை உற்பத்தி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. 

இதற்கு மேலதிகமாக பெரும்போக விவசாய நடவடிக்கையினை கருத்திற் கொண்டு  சீன நிறுவனத்திடமிருந்து நைட்ரிஜன்  சேதன பசளையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அதன் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. முன்னெடுக்கப்பட்ட ஆய்வு பரிசோதனைகளில் நைட்ரிஜன் சேதன பசளையில் இலங்கையின் மண்வளத்திற்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து சேதன பசளை இறக்குமதி செய்வது தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் பெரும்போக விவசாய நடவடிக்கைக்கு தேவையான சேதன பசளை உரத்தை விவசாயிகளுக்கு தடையில்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

No comments