டெலோ வேகமாக காய் நகர்த்துகிறது?கூட்டமைப்பில் கோத்தா அரசை காப்பாற்றும் எம்.ஏ.சுமந்திரனின் சதிகளை முடக்க பங்காளிகள் வேகமாக காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு மேலதிகமாக தமிழ் தேசிய கட்சிகள் அனுப்பி வைத்திருந்த கடிதங்களால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்காக குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.


மேலும் இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும், பங்காளிக் கட்சிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இலங்கை தமிழரசு கட்சி விரும்பாவிட்டாலும், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் தமிழீழ விடுதலை இயக்கம் முன்னின்று செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments