கால்களை நக்கவா?கூட்டிவந்தனர்:ஜனா கேள்வி!தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிசறை அரசியல்வாதி என்றார். 

 அனுராதபுர சிறைச்சாலையில் போதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாளிடவைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியிருந்தார். அவ்வாறான ஒருவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது என்றார். .


 

No comments