அனுராதபுரம் சிறை:அரசியல் கைதியை கொல்ல வந்தாரா அமைச்சரா?



தமிழ் அரசியல் கைதியொருவரை கொல்ல அல்லது அச்சுறுத்த மதுபோதையில் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அனுராதபுரம் சிறைக்கு வந்திருந்தமை அரசியல் கைதிகளது குடும்பங்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

முன்னதாக அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுடன், குடிபோதையில்; சர்வதேச கைதிகள் தினமான ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இராஜங்க அமைச்சர் ஒரு கைத்துப்பாக்கியைக் கூட எடுத்து வந்திருந்ததாகவும், போதையில் இருந்ததால் நடக்க முடியாமல் போன நிலையில் அவரது நண்பர்கள் சிலர் சிறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அமைச்சரும் நண்பர்களும் தேடி சென்றிருந்த அரசியல் கைதி வெலிக்கடை சிறையில் இல்லாத நிலையில் அனுராதபுரம் சிறைக்கு மதுபோதையில் தேடி வந்துள்ளனர்.

கைத்துப்பாக்கியுடன் வருகை தந்திருந்த அமைச்சர் மாலை 6.40 அளவில் சிறையினுள் தனது நண்பர்களுடன் புகுந்துள்ளார்.

எனினும் இலங்கை சிறைகளினுள் மாலை 5.30 பின்னராக எவரும் அனுமதிக்கப்படாத போதும் அமைச்சர் உள்புகுந்த நிலையில் குறித்த தமிழ் அரசியல் கைதி நிலை பற்றி தெரியவில்லை.

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்தவின் மகனே லொகான் ரத்வத்தையாவார்.சந்திரிகாவின் மாமனே அனுருத்த ரத்வத்தேயாவார்.


No comments