மைத்திரியை கைது செய்ய சதி:சுதந்திரக்கட்சி கொதிப்பு!மஹிந்த ராஜபக்ஸவை முன்னதாக பிரதமாகக் கொண்டு வந்ததன் பின்னர் நடந்த சதியே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலாகும்.

அதில் ஒரு புறம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைபிடிக்கப் பார்க்கின்றனர். மறுபுறம் சேவை செய்த புலனாய்வு பிரிவினரைப் பிடிக்கப்பார்க்கின்றனர். புலனாய்வு பிரிவினருக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று எவரையும் சுடமுடியாது. அவர்களால் தகவல்களை பகிர மாத்திரமே முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலின் பிரதான தற்கொலைதாரி ,சஹ்ரானின் அலைபேசியின் மதர்போர்டை யார் எடுத்தது என்பது குறித்து யாராவது கதைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.

இதனை எடுக்கும் போது பொலிஸாரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. வேறொரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல புலனாய்வு பிரிவுக்கு. எனவே அதைத் தான் முதலில் தேட வேண்டும்.

இத்தாக்குதலை நடத்திய நபரின் அலைபேசியில் தானே சகல விடயங்களும் இருக்கும். எனவே,இந்த அலைபேசியின் மதர்போர்டை வேறொரு நாட்டுக்கு புலனாய்வுக்காக எடுத்துச்செல்வார்களாயின் அதற்கு இந்த நாட்டு பொலிஸ் மற்றும் நீதிமன்றம் அனுமதி வழங்குமாயின் அந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அந்த மதர்போர்டை எடுத்துச்சென்றவரிடம் கதைத்து தெரிந்துக்கொள்ளலாம் என்றார்.

எனவே முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள்,உறுப்பினர்கள் மீது விரல் நீட்டுவதால் எந்த பலனும் கிடைத்து விடப்போவதில்லை என்றார். இது தொடர்பில் யாரும் கதைக்கமாட்டார்கள். நாம் எப்போதும் கூறுவது இது மைத்திரிபால சிறிசேனவை கட்டம்கட்டும் ஒரு நடவடிக்கை என சகலருக்கும் தெரியும். அதேப்போல் அவரை அதிகாரத்திலிருந்து கீழிறக்கியம் ஒர் அரசியல் சதியாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமாகக் கொண்டு வந்ததன் பின்னரே அந்த சதி நடந்தது என்றார்.


No comments