நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் !

 


காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் சங்கத்தின் ஆலோசகரான தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.

சர்வதேசமும் இவ்விடயத்தில் மீண்டும் கவனத்தை செலுத்தி எங்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு இன்று யாழ் மாவட்டம் வடக்கு பகுதியில் 2000 நாட்களை கடந்து உறவுகளின் நீதி கோரல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த அரசு மீண்டும் மீண்டும் கண் துடைப்பிற்காக  மீண்டும் மீண்டும் ஏற்பாடு செய்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) போன்ற அலுவலகங்களை நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்  என தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.


No comments