ஊசி போடவில்லை:உணவகத்தினுள் வர அனுமதியில்லை!


அமெரிக்கா சென்றுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ (Jair Bolsonaro) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதால் வீதியோர உணவகத்தில் உணவு உட்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments