தலிபான்களை இரக்கமற்ற குழு என்கிறார் அமெரிக்க ஜெனரல்


தலிபான்களை இரக்கமற்ற குழு என்று அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லி விவரித்துள்ளார். அத்துடன் அவர்கள் மாறுவார்களா என்பது தெளிவாக தெரியவில்லை எனத் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்கால பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா இஸ்லாமிய போராளிகளுடன் ஒருங்கிணைப்பது சாத்தியம் என்று ஜெனரல் மார்க் மில்லி கூறினார்.

நேற்றுபுதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில், ஜெனரல் மில்லி மற்றும் செயலாளர் ஆஸ்டின் இருவரும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய துருப்புக்களையும் பாரிய வெளியேற்றும் பணிகளையும் பாராட்டினர்.

எதிர்கால ஒத்துழைப்பு குறித்து எந்த கணிப்புகளையும் செய்ய விரும்பவில்ல. நாங்கள் ஐஎஸ்-கே மீது கவனம் செலுத்துவதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அந்த தொடர்புகளை அறிந்துகொள்வோம். எதிர்காலத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும் என்றார்.

No comments