யாழ்ப்பாணம்:கடவுளாலும் முடியாதுஅச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். 

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியான  அப்பகுதியை சேர்ந்த தியாகராசா மதனபாதம் (வயது 40) என்பவர் உயிரிழந்திருந்தார். 

 அந்நிலையில் இன்றைய தினம்  அச்சுவேலி முழங்கன் இந்து மயானத்தில் சடலம் தகனம் செய்யப்பட்டது.  

அதன் போது, அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கூடி அஞ்சலி செலுத்தி மயானம் வரை அவரது உடலுடன் ஊர்வலமாக சென்று சடலத்தை தகனம் செய்தனர்.  

வீட்டிலிருந்து அருகாக 300மீற்றர் தூரத்திலுள்ள மயனத்திற்கு 8கிலோமீற்றர் ஊர்வலம் சென்று சுகாதார நடைமுறைகளை புறந்தள்ளி மரண ஊர்வலம் நடத்தப்பட்டிருந்தது

அதேவேளை அவரது இறுதி ஊர்வலத்தில் அவர் ஒட்டிய பேருந்தையும் அவரது நண்பர்கள் ஓட்டி வந்தனர். 


No comments