ஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு!! 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

யேர்மனி டிரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நகை மற்றும் கலைப்படைப்புகளை திருடியதாக ஜெர்மனியில் 6 பேர் மீது

குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆறு பேர் மீது நன்கு திட்டமிடப்பட்டகொள்ளை மற்றும் தீ வைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர் அரச வழக்கறிஞர்கள்.

சந்தேக நபர்கள் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த தெரு விளக்குகளுக்கான மின் விநியோகத்தை துண்டித்து பெர்லினுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஒரு மகிழுந்தை தீ வைத்து எரித்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். 

22 மற்றும் 27 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள், நவம்பர் 2019 இல் கிழக்கு ஜெர்மன் நகரத்தில் உள்ள கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தை (க்ரென்ஸ் ஜெவெல்பே) உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

18 ஆம் நூற்றாண்டுக்குரிய குறைந்தது 21 துண்டு நகைகள் உட்பட 4,300 க்கும் மேற்பட்ட வைரங்கள திருடப்பட்டன. இதன் மொத்த காப்பீட்டு மதிப்பு குறைந்தது 113.8 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன நகைகளை கண்டுபிடிக்க இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.

2017 ஆம் ஆண்டில் பெர்லினின் போட் அருங்காட்சியகத்திலிருந்து "பெரிய மேப்பிள் இலை" என்று பெயரிடப்பட்ட 100 கிலோ கனேடிய தங்க நாணயம் திருடப்பட்டதற்காக இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments