ரோமில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்! அரச நிர்வாகம் மீது வழக்குத் தொடுப்பு!!


இத்தாலியின் தலைநகர் ரோமில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்து உள்ளூர் அரசாங்க நிர்வாகமான தோல்வியடைந்துள்ளது.

இத்தாலிய அரச வழக்கறிஞரான வர்ஜீனாய ராகியின் அலுவலகத்தில் இதற்கெதிரான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரோமின் நகர்ப் பகுதிகளில் கட்டுப்பாடின்றி காட்டுப்பன்றிகளின் இருப்பு அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

லாசியோ பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் பயனுள்ள மேலாண்மைத் திட்டங்களை வழங்கவும் செயல்படுத்தவும் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.


வர்ஜீனாய ராகி 1992 சட்டத்தை சுட்டிக்காட்டினார். இது இத்தாலிய பகுதிகள் வேட்டைக்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட காட்டு விலங்கினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தில் பிடிபடும் காட்டு விலங்குகளை வைத்திருக்கக்கூடிய "பிராந்திய கட்டமைப்புகள்" ரோமுக்கு வழங்க லாசியோ அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் ரோம் மேயர் கூறினார்.

காட்டுப் பன்றி பல ஆண்டுகளாக தங்கள் நிலத்தில் அழிவை ஏற்படுத்தியதற்கு குடிமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பன்றிகளால் வாகன விபத்து ஏற்படுகின்றது. மக்களின் செல்லப்பிராணிகளைத் தாக்குகின்றது. குப்பைகளை் கிளறிவிடுகின்றது என பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த மே மாதம் பல்பொருள் அங்காடிக்கு அருகே ஒரு பெண்ணை 6 காட்டுப்பன்றிகள் சுற்றிவளைத்தமை காணொளியில் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில், விலங்கு உரிமை ஆர்வலர்கள் இத்தாலி முழுவதும் இரண்டு மில்லியன் பன்றிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

No comments