ஊரெல்லாம் கோயில்:உடலமோ சிங்கள ஊரிற்கு!




ஊரெல்லாம் கோயில் கட்டிய தமிழ் மக்கள் உடலங்களை அநாதையாக தகனத்திற்காக சிங்கள தேசத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கொரோனாவினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து 3 சடலங்கள் ஹிக்குரவைக்கும் கிளிநொச்சியிலிருந்து 5 சடலங்கள் பொலனறுவைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன .

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வடக்கில் தினசரி யாழ்ப்பாணத்தில் 5 சடலங்களும், வவுனியாவில் 7 சடலங்களும் எரியூட்டப்படுகின்றன. .

எனினும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதனால் முன்னுரிமை) அடிப்படையில் மருத்துவமனைகளில் இருந்து சடலங்கள் பெறப்பட்டு மின் தகனம் செய்யப்படுகின்றன. 

எனினும் தேக்க நிலை காணப்படுவதால் உறவினர்களிடம் ஒப்புதல் பெற்று மாகாணத்துக்கு வெளியில் சடலங்களை அனுப்பி எரியூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments