சர்வதேச காணாமல் போனோர் தினம்!! வீட்டில் இருந்தபடியே போராட்டம்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று  முல்லைத்தீவில் தொடர்சியாக நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலையால் தத்தமது வீடுகளிலிருந்தபடியே அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடங்களில் ஒன்றுகூடி பாரிய அளவில் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு தமது அன்புக்குரியவர்களுக்கான நீதியை கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய நாளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலும் தமது வீடுகளில் நீதிகோரிய வாசகங்களை தாங்கி நீதியின் குறியீடாக மெழுகுதிரி ஒளி ஏத்தி இன்றைய நாளை அடையாளப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் நீதிகோரி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நாங்கள் இலங்கை அரசை நம்பவில்லை, சர்வதேச விசாரணையே வேண்டும் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வருவது எப்போது ?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? கால அவகாசம் வேண்டாம் - முறையான நீதி விசாரணையே வேண்டும் போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி இன்றை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை   அடையாளப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை  மேற்கொண்டனர்.


No comments