பேரங்கள் படிந்தது பஸிலிடம் UTV

முஸ்லிம்களுக்கான தமிழ் ஒளிபரப்பாக இருந்துவந்த UTV Tamil சேவை இன்று சிங்கள சேவையாக பரிணமித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழ்ச் சேவையாக இயங்கிவந்த இந்த தொலைக்காட்சி முஸ்லிம்களின் நெருக்கடியாக காலகட்டங்களில் அவர்களின் குரலாக இருந்து வந்தது.

இநத நிலையில், இன்று அந்த தொலைக்காட்சி சேவை சிங்கள மொழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

தேசிய தொலைக்காட்சி அலைவரிசை (கொழும்பு அதனை அண்டிய பிரதேசங்கள் UHF 54) , Dialog (இலக்கம் 23), PEO TV (இலக்கம் 127)ஆகியவற்றில் இருந்தும் UTV TAMIL நீக்கப்பட்டு அந்த அலை வரிசையில் சிங்கள சேவை ஒன்று ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

இந்த சிங்கள சேவையை தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமானவர்கள் நடத்தி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments