அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைக்கிறது ரிஜடி!இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு  மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமாகிய பீற்றர் இளஞ்செழியனை கிளிநொச்சி தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும்  புலனாய்வு  பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு   சிவில் உடையில் வருகை தந்தவர் பொலிசார் என தன்னை குறிப்பிட்டு    கிளிநொச்சியில் அமைந்துள்ள தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும்  புலனாய்வு  பிரிவிற்கு செல்லுமாறு குறித்த கடிதத்தை  கையளித்து சென்றுள்ளனர். 

குறித்த கடிதத்தில்   பீற்றர் இளஞ்செழியனை  06.08.2021 அன்று காலை 11 மணிக்கு  கிளிநொச்சி தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும்  புலனாய்வு  பிரிவினால் 

மேற்கொள்ளப்படும் விசாரணையில் வாக்குமூலம்  ஒன்றினை பெறுவதுக்காக  வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments